2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கல்முனை மாநகரசபையின் நிதிப்பிரிவை மேம்படுத்துவதற்கான கலந்துரையாடல்

Suganthini Ratnam   / 2011 ஜூன் 02 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

உள்ளூராட்சி மாகாணசபையின் அனுசரணையுடன் ஆசியமன்றம் நடைமுறைப்படுத்தி வரும் உள்ளூர் பொருளாதார ஆட்சி செயற்றிட்டத்தின் கீழ் கல்முனை மாநகரசபையின் நிதிப்பிரிவை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதனடிப்படையில் மாநகரசபை அதிகாரிகளுக்கும் ஆசியமன்ற அதிகாரிகளுக்குமிடையிலான கலந்துரையாடலொன்று கல்முனை மாநகரசபையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

மாநகர முதல்வர் மசூர் மௌலான தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆசியமன்றத்தின் ஆலோசகர் தமரா பெய்லர், ஆசியமன்றத்தின் நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர்களான றிஷாட் ஷரீப், எம்.ஐ.எம்.வலீத், மாநகரசபை கணக்காளர் எல்.டீ.சாலிதீன் உட்பட மாநகரசபை உறுப்பினர்களும் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.


  Comments - 0

  • radan Friday, 03 June 2011 03:18 AM

    ஆசிய மன்றத்தின் பணம் தொடர்ச்சியாக வீண் விரயம் செய்யப்படுகிறது. எந்த ஆக்க பூர்வமான நடவடிக்கையும் அல்லது மாற்றமும் இதுவரை நடக்கவில்லை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X