2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2011 ஜூன் 02 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

அட்டாளைச்சேனை மீலாத் நகர் அல் ஜெஸீறா வித்தியாலய மாணவர்களுக்கு அன்பளிப்பாக பாதணிகளை வழங்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை அல் ஜெஸீறா வித்தியாலயத்தில்  இடம்பெற்றது.

இதற்கான நிதியினை அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி. எச். பியசேன  தனது சொந்த நிதியிலிருந்து ஒதுக்கியிருந்தார்.

மீலாத் நகர் அல் ஜெஸீறா வித்தியாலயத்தின் அதிபர் எம்.ஐ.எம். றியாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன பிரதம அதிதியாக கலந்து கொண்டு மேற்படி பாதணிகளை மாணவர்களுக்கு வழங்கி வைத்தார்.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினரின் முயற்சியின் பயனாக கல்முனை சர்வோதயத்தின் ஏற்பாட்டில் யுனிசெப் அமைப்பினால் வழங்கப்பட்ட சுமார் ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியுள்ள கற்றல், விளையாட்டு உபகரணங்களையும் நாடாளுமன்ற உறுப்பினர் பாடசாலைக்கு வழங்கிவைத்ததுடன் வித்தியாலயத்தில் நடப்பட்டிருந்த பயிர்களின் அறுவடையினையும்  ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில், அட்டாளைச்சேனை அந்நூர் வித்தியாலய அதிபர் ஏ.எல். யாசீன் மீலாத் நகர் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் ஏ.பி. இஸ்மாயில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .