2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பல மாதங்களின் பின் அம்பாறையில் அதிகளவான மீன்கள்

Suganthini Ratnam   / 2011 ஜூன் 02 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் பல மாதங்களுக்குப் பின்னர் இன்று வியாழக்கிழமை அதிகளவான மீன்கள் பிடிபட்டதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர்.

சுமார் 04, 05 மாதங்களுக்குப் பின்னர் கரைவலை மீனவர்களுக்கு இவ்வாறு அதிகளவான மீன்கள் பிடிபட்டதாக அவர்கள் கூறினர்.

நெத்தலி, முரல், பாரைக்குட்டி போன்ற மீன்கள் இன்று அதிகளவில் கிடைத்தன.

கடந்த சில மாதங்களாக அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேங்களில் மீன்களின் விலை மிகவும் அதிகரித்துக் காணப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .