2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

அல் ஜெஸீறா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் வறிய மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2011 ஜூன் 05 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட அட்டாளைச்சேனை அல் ஜெஸீறா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் வறிய மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை அல் ஜெஸீறா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

அஸ்மியா பௌண்டேசன் ஸ்தாபகத் தலைவர் எஹியாகான் (நௌஸர்) தனது சொந்த நிதியிலிருந்து இப்பாதணிகளை கொள்வனவு செய்து வழங்கிவைத்தார்.

பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம். றியாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,
அல் ஜெஸீறா வித்தியாலயத்தின் பிரதியதிபர் எம்.ஐ.எம். பாயிஸ், உதவியதிபர் எம்.ஐ. ஜௌபர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X