Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 ஜூன் 13 , மு.ப. 07:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட், எம்.சி.அன்சார், எஸ்.எம்.எம்.ரம்ஸான்,)
சம்மாந்துறைப் வலயக்கல்வி பணிமனைக்குட்பட்ட பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் இன்று காலை 8 மணியளவில் சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலக வளாகத்துக்குள் நுழைந்து ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.
சம்மாந்துறை வலயப் பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உள்ளக இடமாற்றங்களை ரத்துச் செய்யுமாறு கோரி இவ்வார்பாட்டத்தின்போது மாணவர்கள் கோஷமிட்டனர்.
சம்மாந்துறையிலுள்ள மர்ஜான் பெண்கள் கல்லூரி, மத்திய கல்லூரி, தாருஸ்ஸலாம் வித்தியாலயம் உள்ளிட்ட பல பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆரம்பத்தில் தத்தமது பாடசாலைகளிலிருந்து பதாதைகளுடன் பேரணியாக வந்து, சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் முன்னால் மாணவர்கள் ஒன்று திரண்டனர். இதன்போது மாணவர்கள் வலயக் கல்வி அலுவலகத்தினுள் உள்நுழையா வண்ணம் அதன் பிரதான வாயிற் கதவுகளை அலுவலகத்தைச் சேர்ந்தோர் மூடியிருந்தனர்.
ஆயினும் மாணவர்கள் கதவைத் திறக்குமாறு கோஷமிட்டுக் கொண்டு, வாயிற் கதவைத் தள்ளித் திறக்க முற்பட்டனர். அச் சமையம் பொலிஸார் தலையிட்டு கதவைத் திறக்க வைத்ததையடுத்து மாணவர்கள் வலயக் கல்வி அலுவலக வளாகத்தினுள் நுழைந்து ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, சம்மாந்துறைப் பாடசாலகளிலுள்ள ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றங்களை ரத்துச் செய்யுமாறும், அந்த இடமாற்றங்களை கண்டிக்கும் வகையிலும் எழுதப்பட்டிருந்த பல்வேறு பதாதைகளை மாணவர்கள் ஏந்தியிருந்தனர்.
மேலும் மாணவர்களுடன் உரையாற்றிய பிரதிக் கல்விப் பணிப்பாளர், இந்த ஆசிரியர் இடமாற்றம் இவ்வாறானதொரு காலகட்டத்தில் இடம்பெறுவதில் எமக்கும் விருப்பமில்லை. ஆனால், மேலதிகாரிகளின் கட்டளைக்கிணங்களே நாம் இந்த இடமாற்றங்களை வழங்கியுள்ளோம். மேலும், இந்த இடமாற்றத்தினால் உங்கள் பாடசாலைகளில் ஆசிரியர் தட்டுப்பாடு நிலவுமாயின் அதை நாம் நிவர்த்தி செய்வோம். ஆனால், சிறப்பாகக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்க வேண்டாம் என்று கூறுவதையெல்லாம் எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம், பாடசாலைகளில் மேலதிகமாக உள்ள ஆசிரியர்களுக்கே நாம் இடமாற்றங்களை வழங்கியுள்ளோம் என்றார்.
இதன்போது, மாணவர்களை நேரில் சென்று சந்தித்த கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க சம்மாந்துறை கல்வி வலயத்துக்குட்பட்ட ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்தினை ரத்துச் செய்வதற்குரிய நடவடிக்கைகளை தான் உடனடியாக மேற்கொள்வதாக சம்மாந்துறைப் பிரதேச மாணவர்களிடம் உறுதியளித்துள்ளார்.
இதன்போது, மாணவர்கள் மகஜர் ஒன்றை அமைச்சருக்கு கையளித்தனர்.
11 minute ago
23 minute ago
42 minute ago
57 minute ago
Dean Monday, 13 June 2011 11:54 PM
இது கிழக்கு கல்வியில் ஒரு நல்ல சகுனமில்லை . ஒரு பாடசாலை இழக்கும் ஆசிரியரை இன்னொரு பாடசாலை பெற்றுக்கொள்ளும் . உண்மையில் ஒரு மாணவனுக்கு கல்வி வழங்கப்பட்டால் சரி மாணவர்கள் தானாக இவ்வாறு சிந்தித்து செயல்படுவதில்லை . இங்கு அவர்கள் பிழையாக வழிகாட்டப்பட்டுள்ளார்கள் . இது தற்காலிக சந்தோசமாக சிலருக்கு தெரிந்தாலும் கிழக்கு பிரதேச கல்வியில் பாரிய பின்னடைவுகளை எதிர்காலத்தில் உண்டாக்கும் . கல்வி அமைச்சர் அவசரப்பட்டு முடிவுகளை எடுக்கக் கூடாது. எனவே மாகாணத்தில் முறையான இடமாற்ற கொள்கை ஒன்றை உருவாக்க வேண்டும்.
Reply : 0 0
Mohd rizvi -Qatar Tuesday, 14 June 2011 05:14 PM
ஆசிரிய பெருந்தகைகளே உங்கள் சுய நலத்திற்காக மாணவர்களை தவறாக வழி நடத்தாதீர்கள். மாணவ செல்வங்களின் கல்வியை சீரழிக்காதீர்கள்.
Reply : 0 0
akkarai Wednesday, 15 June 2011 01:14 AM
சுயநல அரசியல் உண்டு, சுயநல ஆசான்களுமா?
வேண்டாம் ஆசான்களே வேண்டாம், உங்கள் தேவைக்கு மாணவர்களை திசைதிருப்ப வேண்டாம்.
போராட்டம்..... கொடிபிடித்தல்........
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
23 minute ago
42 minute ago
57 minute ago