2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

அதிகாரமற்றவரின் கையொப்பத்திற்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்

A.P.Mathan   / 2011 ஜூன் 14 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்)

சம்மாந்துறை கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட உள்ளக இடமாற்றக் கடிதங்களில் கையொப்பமிட்டிருந்த பிரதிக் கல்விப் பணிப்பாளர் - அந்தக் கடிதங்களில் தனது பதவியினை வெளிப்படுத்தும் வகையில் பயன்படுத்தியிருந்த ரப்பர் முத்திரையினை மாற்றியுள்ளார்.

மேற்படி உள்ளக இடமாற்றக் கடிதங்களில் குறித்த பிரதிக் கல்விப் பணிப்பாளர் கையொப்பமிடுவதற்கு அதிகாரமில்லை என்று இடமாற்றக் கடிதங்களைப் பெற்றுக் கொண்ட ஆசிரியர்கள் சிலரால் எதிப்புத் தெரிவிக்கப்பட்ட அதேவேளை இவ்விடயம் குறித்து கட்டுரைகளும் வெளிவந்திருந்தன.

இதேவேளை, இவ்வாறான இடமாற்றக் கடிதங்களில் வலயக் கல்விப் பணிப்பாளர்களே நேரடியாகக் கையொப்பமிட வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்ட போதிலும், கிழக்கு மாகாணத்திலுள்ள ஒரு வலயக் கல்வி அலுவலகத்தில் அதிகாரமற்ற ஒருவர் ஒப்பமிட்ட விடயம் தனது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், இது குறித்து விசாரணை நடத்தப்படுவதாகவும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, பிரஸ்தாப பிரதிக் கல்விப் பணிப்பாளர் தன்னுடைய ரப்பர் முத்திரையில் இருந்த ஆங்கில வாசகங்களுக்கிடையில், 'வலயக் கல்விப் பணிப்பாளருக்காக' (for Zonal Director of Education) எனும் வாசகத்தினைப் புதிதாகச் சேர்த்துக் கொண்டுள்ளார்.


  Comments - 0

  • Dean Tuesday, 14 June 2011 07:59 PM

    இதைக் குற்றம் பிடித்து இடமாற்றத்தை நிறுத்தத் தேவையில்லை . இது ஒரு சிறிய விடயம். தங்களுக்கு சாதகம் என்றால் யார் ஒப்பம் இட்டாலும் எடுத்துக்கொள்வார்கள் , பிடிக்கா விட்டால் சுற்று நிருபம் எல்லாம் காட்டி கட்டுரை வேறு எழுதுகிறார்கள் . இதுவெல்லாம் தேவையில்லை . தனது திறமையில் நம்பிக்கை கொண்ட ஆசிரியர்கள் இடமாற்றம் வந்தால் உடனே புதிய பாடசாலைக்கு உடனே செல்வார்கள். பெற்றோர் புரிந்து கொண்டால் சரி.

    Reply : 0       0

    ஜெமீல் மகான் Tuesday, 14 June 2011 09:10 PM

    சம்பாந்துறையில் மட்டுமல்ல . கிழக்கு மாகாணத்தில் சகல வலயங்களிலும் இவ்விடமாற்றம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. உதாரணம் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள மிகை ஆசிரியர்கள் அனைவருக்கும் இடமாற்றக் கடிதம் கிடைத்துள்ளது. இடமாற்றம் அனைவருக்கும் பொதுவான உன்றே. எனினும், குறுகிய கால அவகாசத்தில் இவ்விடமாற்றக் கட்டளை பிறப்பிக்கப்பட்டதே இங்கு பிழையாகுமே தவிர, கையெழுத்துப் போட்டவர்களையெல்லாம் குற்றம் சுமத்துவது நல்லதல்ல.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .