2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

'இடமாற்றத்தினால் பாதிக்கப்பட்டோர் மேன்முறையீடு செய்யலாம்'

Super User   / 2011 ஜூன் 14 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

கிழக்கு மாகாண ஆசிரியர் சமமின்மையை நீக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள வலயங்களுக்குட்பட்ட ஆசிரியர் இடமாற்றத்தினால் பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் தமது மேன்முறையீடுகளை வலயக் கல்வி பணிப்பாளர்களிடம் சமர்ப்பிக்கலாம் என கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார தெரிவித்தார்.

ஐனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலுக்கமைய மேற்கொள்ளப்பட்டுள்ள இடமாற்றம் தொடர்பான முன்னேற்றம் குறித்து ஐனாதிபதி செயலகம் தம்மிடம் அறிக்கை கோரியுள்ளதாவும் அவர் தெரிவித்தார்
 
ஏற்கனவே கஷ்ட பிரதேசத்தில் கடமையாற்றிய ஆசிரியர்களை மீண்டும் கஷ்ட பிரதேசத்திற்கு இடமாற்றம் செய்யும் நடவடிக்கை, கர்ப்பிணி ஆசிரியைகள் மற்றும் 53 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களை இடமாற்றம் செய்யும் நடவடிக்ககை ஆகியவற்றை கைவிடுமாறு விடுத்த பணிப்புரைக்கு மாறாக சல வலயங்கள் செயற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான முறையில் இடம்பொற்றிருந்தால் இது தொடர்பான மேன் முறையீடுகளை தத்தமது வலயக்கல்வி அலுவலங்களில் சமர்ப்பிக்க முடியும் என்ற அவர்,  வலய மட்டத்தில் இது தொடர்பான மேன் முறையீடு சபைகளை நிறுவி மேன் முறையீடுகளை பரிசீலனை செய்து இடமாற்றத்தை இரத்து செய்யும் அதிகாரம் வலயக்கல்வி பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இடமாற்ற கடிதங்களில் வலயக்கல்வி பணிப்பாளர்கள் தாம் நேரடியாக ஒப்பமிட வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்ட போதிலும் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஓரு வலயக்கல்வி அலுவலகத்தில் அதிகாரமற்ற ஒருவர் ஒப்பமிட்ட விடயம் தனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அந்த இடமாற்ற கடிதங்களில் ஒப்பமிட்ட உத்தியோகத்தருக்கு நிர்வாகத்திற்கான பிரதி கல்விப் பணிப்பாளர்களுக்கு பதவி வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தாh.

தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஆசிரியர் இடமாற்றம் எந்த சந்தர்ப்பத்திலும் இரத்து செய்யப்படமாட்டாதென தெரிவித்த அவர் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒரு வலயக்கல்வி பணிப்பாளர் இடமாற்றம் இரத்து செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பில் இதுவரை இடமாற்ற கடிதங்களை ஆசிரியர்களுக்கு அனுப்பிவைக்காமல் உள்ள விடயமும் தனது கவனத்திற்கு வந்துள்ளதாகவும் இது குறித்து விசாரணையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்

மேற்படி உள்ளக இடமாற்றத்தில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த சுமார் 2,000 மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .