2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

ஆற்றினை தோண்டி அகலப்படுத்தும் நடவடிக்கையினை அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் பார்வை

Super User   / 2011 ஜூலை 01 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் நிதியுதவி மூலம் ஒலுவில் கோணா ஆற்றினை தோண்டி அகலப்படுத்தும் நடவடிக்கையினை அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல்.எம். நசீர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட குழுவினர் நேற்று வியாழக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டனர்.

இப்பகுதி நெற்செய்கை நிலங்களின் மேலதிக நீரை வெளியேற்றும் வடிசலாக அமைந்துள்ள இக் கோணா ஆறு, கடந்த வெள்ளத்தின் போது மண் மூடப்பட்டு, நீர் வடிந்தோட முடியாதவாறு தூர்ந்து போனது.

இதனால், இப்பகுதியிலுள்ள நெற்செய்கை நிலங்களின் வடிச்சல் நடடிவடிக்கைகள் பாதிப்புக்குள்ளானது. இதனையடுத்து ஒலுவில் கோணா ஆற்றினைத் தோண்டித் தருமாறு இப்பகுதி விவசாயிகள் அட்டாளைச்சேனை பிரதேச சபையிடம் வேண்டுகோளொன்றினை விடுத்தனர்.

இதற்கமைவாகவே, பிரதேச சபையின் நிதியின் மூலம் இந்த ஆற்றினை இயந்திரத்தினால் தோண்டி அகலமாக்கும் நடவடிக்கை இடம்பெற்று வருகிறது.

மேற்படி வேலைத் திட்டத்தினை பார்வையிடும் முகமாக அட்டாளைச்சேனை பிரதி தவிசாளர் எம்.ஏ. அன்சில், உறுப்பினர்களான எஸ்.எல்.முனாஸ், என்.எல். யாசிர் ஐமன், ஏ.எல். நபீல், ஐ.எல். அப்துல் மனாப், எம்.எல்.எம். பாரீன், ஏ.எல். சுபைதீன் மௌலவி மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஜவாத் உள்ளிட்டோர் அப்பகுதிக்குச் சென்றிருந்தனர்.  

                   


  Comments - 0

  • nanpan Wednesday, 06 July 2011 06:29 PM

    இதுதான் சேவை. வாழ்த்துக்கள் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களே.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X