Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஜூலை 02 , பி.ப. 01:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ். எம்.எம்.றம்ஸான்)
உலகில் மிகவும் செல்வாக்குள்ள 500 முஸ்லிம் பிரமுகர்களுள் ஒருவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சாய்ந்தமருதைச் சேர்ந்த தேசபந்து ஜெஸீமா இஸ்மாயிலை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி சேர் ராசிக் பரீட் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
அம்பாறை மாவட்ட சர்வ சமய சம்மேளனத்தின் தலைவர் டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல் தலைமையில் இடம்பெற்ற பாராட்டு விழா நிகழ்வில், கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மருத்துவ பீட பீடாதிபதி கலாநிதி மஹ்ருப் இஸ்மாயில் பிரதம அதிதியாகவும் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா விஷேட அதிதியாகவும் மற்றும் சம்மாந்துறை பிரதேச தவிசாலர் ஏ.எம்.நௌசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அம்பாறை மாவட்ட சர்வ சமய சம்மேளனம் , சாய்ந்தமருது சிரேஸ்ட பிரஜைகள் குழு, கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மற்றும் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் கிழக்கு இணைப்பாளர் காரியாலயம் என்பன கூட்டாக இப்பாராட்டு விழா நிகழ்வினை ஒழுங்கு செய்திருந்தன.
தேசபந்து ஜெஸீமா இஸ்மாயில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும் பிரபல சமூகசேவையாளருமாவார்.
4 hours ago
4 hours ago
7 hours ago
Mahroof Haj Mohideen Monday, 04 July 2011 12:04 PM
மிகவும் மகிழ்ச்சியான செய்தி. வெளிநாட்டில் வாழும் ஸ்ரீலங்கன் சகோதர சகோதரிகளும் தேசபந்து ஜெசிமா இஸ்மாயில் அவர்களை போற்றுகிறோம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
7 hours ago