Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஜூலை 02 , பி.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சி.அன்சார்)
பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களின் திறமையை பாராட்டி ஊக்குவிக்கும் முகமாக அம்பாறை மாவட்ட 'ஸ்திரி மேளா' (இலங்கை பெண்களின் குரல்) 7 ஆவது கண்காட்சி மற்றும் இன்று சனிக்கிழமை காலை அம்பாறை நகர மண்டபவத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் சங்கத் தலைவி விசாகா தர்மதாச தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக முன்னாள் அமைச்சரும், இலங்கைக்கான சிங்கப்பூர் தூதுவருமான பேரியல் அஷ்ரப், நாடாளுமன்ற உறுப்பினரான சிறியாணி விஜேவிக்கிரம, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தங்கேஷ்வரி, முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி மைமுனா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சாந்த பிரேமரட்ன பிரதேச செயலாளர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள், பாடசாலை மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்கள்.
இவ் வைபவத்தின் போது, ஐக்கிய நாடுகளின் சபையின் பெண்களுக்கான 4213 ஆம் முன்மொழிவின் கீழ் 1325 ஆம் கூற்றை முன்னுதாரணமாக கொண்டு பெண்கள் தனது பாதுகாப்பு மற்றும் உரிமைகள் மூலமாக வாழ்கையை எவ்வாறு பயனுள்ளதாகவும், வெற்றிகரமாகவும் மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும் என்பதுடன் முகாமைத்துவம், வாழ்க்கைப் போராட்டம், குடும்ப வன்முறை, அனர்த்த முகாமைத்துவம், சிறுவர் பாராமரிப்பு, சுயதொழில் அபிவிருத்தி, பெண் அலங்கார கலை, சட்டம், பெண்கள் உரிமைகள், குடும்ப கட்டுப்பாடு தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
அத்துடன் பெண்களால் தயாரிக்கப்பட்ட கைப்பணிப் பொருட்களும் காட்சி வைக்கப்பட்டிருந்ததோடு கலை மற்றும் கலாசார நிகழ்சிகளும் இடம் பெற்றன.
இம்மாவட்டத்தில் அரச பணிகள் மற்றும் சமூச சேவைகள் உட்பட பல்வேறு துறைகளில் வெற்றி பெற்று திறமைகளை வெளிக்காட்டிய துணிச்சல் மிக்க பெண்கள் பாராட்டப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், 'சமாதானம் எமது உரிமை' எனும் கையொழுத்து வேட்டையும் இடம் பெற்றது.
இக்கண்காட்சி நாளையும் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கமை.
5 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
8 hours ago