2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

கிழக்கு மாகாணத்தில் கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு பற்றாக்குறை

Menaka Mookandi   / 2011 ஜூலை 04 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

கிழக்கு மாகாணத்தில் உள்ள வலயக் கல்வி அலுவலகங்கள், கோட்டக் கல்வி அலுவலங்களில் கடமையாற்றுவதற்கென இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு பாரிய பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் கே.உடகே தெரிவித்தார்.

இந்நிலையில், கிழக்கு மாகாணத்தில் தமிம் மொழிமூலம் 113 அதிகாரிகளுக்கான வெற்றிடங்களும், சிங்கள மொழிமூலம் 43 அதிகாரிகளுக்கான வெற்றிடங்களும் நிலவுகின்றது. 254 அதிகாரிகள் தேவையாக இருந்த போதிலும் 98 அதிகாரிகள் மாத்திரம் தற்போது சேவையில் உள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

பாடசாலை ரீதியான உதவிக் கல்விப் பணிப்பாளர் வெற்றிடங்களையும் கோட்டக் கல்வி அதிகாரிகளுக்கான வெற்றிடங்களையும் மாகாணத்தில் உள்ள ஆசிரியர் அதிபர்களை தற்காலிக அடிப்படையில் கடமையாற்ற அனுமதித்துள்ளதன் மூலம் பணிகள் நிறைவேற்றப்படுகின்றன. இவர்களை இலங்கை கல்வி நிர்வாக சேவைக்குள் உள்ளீர்ப்பதற்கான வாய்ப்பு இல்லையென மத்திய கல்வி அமைச்சு அறிவித்துள்ளதகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை நாடளாவிய ரீதியில் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள 700 அதிபர் ஆசிரியர்களை இலங்கை கல்வி நிர்வாக சேவைக்குள் உள்வாங்க எடுக்கப்பட்ட முயற்சி அமைச்சரவையின் சிபாரிசிற்கமைய கைவிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கான நியமனங்கள் போட்டிப் பரீட்சை அடிப்படையில் வழங்கப்படும்மெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X