2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

பாடசாலை நீர் நஞ்சானமை குறித்து விசாரணை நடத்த உத்தரவு

Super User   / 2011 ஜூலை 05 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

சம்மாந்துறை பிரதேச பாடசாலையொன்றில் நீர் நஞ்சானமை குறித்து உடனடியாக விசாரணைகளை நடாத்துமாறு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் டப்ளியூ.குணவர்த்தனவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

விசாரணை தொடர்பான முழுமையான அறிக்கையை விரைவில் தனக்கு சமர்ப்பிக்குமாறு மாகாண அமைச்சர் சுபைர் மாகாண பிரதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தை கேள்வியுற்ற மாகாண அமைச்சர்இ சம்மாந்துறை வைத்தியசாலைக்கு விஜயம் செய்துஇ நிலைமைகளை நேரில் அவதானித்ததுடன் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான சிகிச்சைகளை வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளார்.

சம்மாந்துறை பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலையொன்றின் நீர் நஞ்சானமையினால் சுமார் 75 மாணவர்கள் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் சம்மாந்துறை வைத்தியசாலையில் இன்று வெச்சாய்க்கிழமை காலை அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X