Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஜூலை 05 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட், எஸ்.எம்.எம்.ரம்ஸான்)
சம்மாந்துறை பிரதேசத்திலுள்ள பாடசாலையில் நீரை அருந்திய மாணவர்களின் நிலைமை தொடர்பில் வைத்திய அதிகாரிகள் முரண்பாடான தகவல்களை தெரிவிக்கின்றனர்.
மேற்படி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட எந்தவொரு மாணவருக்கும் பாரதூரமான தாங்கங்கள் எவையும் இல்லை என்றும், மிகச் சிறிய அளவிலான நோய் அறிகுறியே அனைத்து மாணவர்களிடமும் காணப்படுவதாகவும் கல்முனைப் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர்: எம்.எஸ். இப்றாலெப்பை தெரிவித்தார்.
இதேவேளை, பாதிப்புக்குள்ளான மாணவர்களில் நான்குபேர் ஆபத்தான நிலையில் மயக்கத்துடன் வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டதாகவும், அவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்து தாம் சிகிச்சையளித்து வருவதாகவும் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை பொறுப்பதிகாரி டாக்டர். ஏ.இஸ்;ஸதீன் கூறுகின்றார்.
இவ்விடயம் தொடர்பில் கல்முனைப் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் எம்.எஸ். இப்றாலெப்பை தெரிவிக்கையில்ளூ
'தாருஸ்ஸலாம் வித்தியாலயத்தில் இரண்டு வகையான தண்ணீர் உபயோகத்தில் உள்ளன. ஒன்று நீர் வழங்கல் அதிகார சபையினால் வழங்கப்படுவது, மற்றையது கிணற்றிலிருந்து எடுக்கப்படுகின்ற நீர்.
நீர் வழங்கல் அதிகார சபையினால் வழங்கப்படும் நீரைப் பருகிய மாணவர்களுக்கு நோய் அறிகுறிகள் காணப்படவில்லை. கிணற்றிலிருந்து நீர் தாங்கிக்கு செலுத்தி பின்னர் தண்ணீர் தாங்கியிலிருந்து பெறப்பட்ட நீரை பருகிய மாணவர்களுக்கே நோய் அறிகுறிகள் காணப்படுகின்றன.
இத்தண்ணீரில் ஒரு வகையான இரசாயன கலப்பு இடம்பெற்றுள்ளது. அதைப் பருகியமையினாலேயே மாணவர்களுக்கு இவ்வாறான நோய் அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன.
மேற்படி நீரைப் பருகிய மாணவர்களுக்கு மிகச் சிறிய அளவிலேயே நோய் அறிகுறிகள் காணப்படுகின்றன. இந்த தண்ணீரைப் பருகிய மாணவர்களுக்கு தலைசுற்று மற்றும் வாந்தி போன்ற சிறிய அறிகுறிகள் இருந்த போதும், எந்தவொரு பாரதூரமான தாக்கங்களும் எந்தவொரு மாணவருக்கும் காணப்படவில்லை' என்றார்.
இதேவேளை, மேலதிக விசாரணைகளுக்காக குறித்த மாணவர்களின் இரத்த மற்றும் சிறுநீர் மாதிரிகள் அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக கல்முனைப் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் எம்.எஸ்.இப்றாலெப்பை மேலும் தெரிவித்தார்.
4 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
7 hours ago