2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி

Kogilavani   / 2011 ஜூலை 12 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)
திருக்கோவில் விநாயகபுர பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள்  விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

தம்பிலுவில் 2 ஆம் பிரிவைச் சேர்ந்த வீரபத்திரன் சாமித்தம்பி (வயது 44) என்ற குடும்பஸ்தரே இவ்விபத்தில் உயிரழந்துள்ளார். கஞ்சிக்குடியாறு வயல் பிரதேசத்தில் வேளாண்மை நடவடிக்கையை முடித்து விட்டு வீடு திரும்பிக்கொண்டடிருந்த வேளை மோட்டார் சைக்கிளின் வேகம் கட்டுப்பாட்டை இழந்ததினால் மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டு பிரேத பரிசோதனையின் பின் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X