Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஜூலை 12 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கே.எஸ்.வதனகுமார்)
கதிர்காம பாத யாத்திரையின் போது காட்டு மிருகத்தின் தாக்குதலில் உயிரிழந்த பெண் தொடர்பிலான மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக உறவினர்கள் தெரிவித்துள்ளமை தொடர்பில் நீதியான விசாரணை நடாத்தப்பட்டு உண்மை நிலை வெளிப்படுத்தப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தம்பிலுவில் வீசி வீதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான கிருஸ்ணபிள்ளை சந்திரகுமாரி என்பவர் யால வள்ளியம்மை ஆற்று பகுதியில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.
இது விலங்குகளின் தாக்குதலினால் ஏற்பட்ட மரணம் என தெரிவிக்கப்பட்ட போதிலும் அது விலங்குகளினால் ஏற்பட்ட தாக்குதல் இல்லையென உறவினர்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கழுத்து பகுதியில் கத்தி போன்ற கூரிய ஆயுதங்களினால் தாக்கப்பட்டுள்ளதுடன் ஆடைகளும் கிழிந்துள்ள நிலையில் இருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் சம்பவம் இடம்பெற்ற நேரம், அப்பிரதேசத்தில் சீருடை அணிந்தவர்களின் நடமாட்டம் இருந்ததை சிலர் கண்டு தெரிவித்துள்ளதாகவும் உறவினர்கள் கூறியுள்ளனர்.
அத்துடன் குறித்த பெண் கொலையுண்ட இடத்துக்கு வந்த படையினரும் வன இலகா அதிகாரிகளும் குறித்த சடலத்தை உடனடியாக கொண்டுசென்று எரிக்க நடவடிக்கைகள் எடுத்தனர்.
எனினும் அது தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அந்த முயற்சியும் கைவிடப்பட்டு சடலம் கதிர்காமம் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு பின்னர் திஸ்ஸமஹாராம வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
இதேநேரம் இச்சம்பவம் தொடர்பில் சாட்சியங்கள் வழங்கியோர் உறவினர்கள் படையினரால் வீடியோ பண்ணப்பட்டுள்ளனர்.
இவ்வாறான செயற்பாடுகள் இந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளன.
எனவே இந்தச்சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இந்த விசாரணைகள் உண்மை தன்மையானதாக மேற்கொள்ளப்பட்டு அதன் உண்மை தன்மைகள் வெளிக்கொணரப்படுவதன் மூலமே பாத யாத்திரை செல்லும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்றார்.
5 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
8 hours ago