2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

ஊடகவியலாளர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு

Super User   / 2011 ஜூலை 13 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான், எஸ்.மாறன்)

இலங்கையில் தேசிய நோய் தடுப்பு திட்டம் மீதான நம்பிக்கையை மீள கட்டியெழுப்புவதற்றகாக 'உறங்கி கொண்டிருக்கும் பேய்களை எழுப்பாதீர்கள்' எனும் தொனிப்பொருளில்  அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வொன்று இன்று புதன்கிழமை அம்பாறை  பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

அம்பாறை பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர் டாக்டர் சேனக தனகல தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் வைத்திய நிபுணர் டாக்டர் சுதத் பீரிஸ்இ டெய்லி மிரர் பத்திரிகையின் உதவி ஆசிரியர் எம்.எஸ்.எம்.ஐயூப்இ யுனிசெப்  அமைப்பின் பிரதம தொடர்பாடல் அதிகாரி மேர்வின் பிளெச்சர மற்றும் அம்பாறை பிரதேச தொற்றுநோய் நிபுணர் டாக்டர்  இரேஸா விக்ரமசிங்க ஆகியோர் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X