2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

திருக்கோவில் பிரதேசத்தில் மந்தகதியில் வாக்களிப்பு

Suganthini Ratnam   / 2011 ஜூலை 23 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

திருக்கோவில் பிரதேசசபைக்கான தேர்தல் வாக்களிப்புகள் மிகவும் சுமூகமான முறையில் நடைபெற்று வருகின்றன. ஆனாலும் வாக்களிப்பு வீதம் மந்தகதியில்  காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இன்று நண்பகல் வரையில் திருக்கோவில் பிரதேசத்தில் சுமார் 20 வீதமான வாக்குகளே அளிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

திருக்கோவில் பிரதேச வாக்களிப்பு நிலையங்களில் ஒன்றான தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்தில் காலை 10 மணி வரை சுமார் 120 வாக்குகளே அளிக்கப்பட்டிருந்தன. இந்த வாக்களிப்பு நிலையத்தின் மொத்த வாக்காளர் தொகை 853 ஆகும்.

தம்பிலுவில் சரஸ்வதி வித்தியாலயத்தில் சுமார் 10 வீதமான வாக்குகளே அளிக்கப்பட்டிருந்ததாக நிலையத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X