2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

ஒலுவில் துறைமுக நுழை வாயிலை மறித்து போராட்டம்

Kogilavani   / 2012 டிசெம்பர் 14 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


ஒலுவில் துறைமுக நுழை வாயிலை மறித்து அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.அன்சில் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை காலை போராட்டமொன்று இடம்பெற்றது.

இப் பிரதேசத்தில், ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்றவர்களின் மீன்களை துறைமுக நுழை வாயிலினூடாக வெளியேற்றுவதற்கு துறைமுக அதிகாரிகள் மறுப்புத் தெரிவித்ததையடுத்து, பிரதேச சபைத் தவிசாளர்  எம்.ஏ.அன்சில் தலைமையில் பிரதேச சபை உறுப்பினர்கள், மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் ஈடுகின்றவர்களின் படகுகள் அசாதாரண சூழ்நிலைகளின் போது ஒலுவில் துறைமுகத்தில் தரிப்பதற்கும், அவர்களின் மீன்களை துறைமுக வாயிலினூடாக வெளியேற்றுவதற்கும் கடந்த சில வருடங்களாக அனுமதிக்கப்பட்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

துறைமுக நிர்மாணப் பணியில் ஈடுபட்டு வந்த வெளிநாட்டு நிறுவனத்தினரே இந்த அனுமதியினை வழங்கியிருந்தனர்.

ஆனால், சில வாரங்களுக்கு முன்னர் ஒலுவில் துறைமுகத்தினை - துறைமுகங்கள் அதிகாரசபையினர் பொறுப்பேற்றுக் கொண்டதன்  பின்னர், துறைமுகத்தினூடாக மீன்களை வெளியேற்றுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவதாக மீனவர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில், இன்றைய தினமும்  துறைமுகத்துக்குள் நுழைந்துள்ள படகின் மீன்களை துறைமுக நுழைவாயிலினூடாக வெளியேற்றுவதற்கு அனுமதிக்குமாறு கோரி  இப்போராட்டம் இடம்பெற்றது.

இதன்போது, ஒலுவில் துறைமுக சிரேஷ்ட பயிற்சி முகாமையாளர் யூ.எல்.ஏ.நஜீப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கிய அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் அன்சிலுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

இதனையடுத்து, துறைமுகத்தில் தற்போது தரித்துள்ள படகிலிருக்கும் மீன்களை துறைமுக நுழைவாயிலினூடாக வெளியேற்றுவதற்கு துறைமுக நிர்வாகத்தினர் அனுமதி வழங்குவதாக தெரிவித்தனர்.






  Comments - 0

  • Nafeel Friday, 14 December 2012 12:51 PM

    ஓலுவில் மக்கள் இனியாவது விழிப்புற வேண்டும். ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக போராட வேண்டும்.

    Reply : 0       0

    Mohammed Saturday, 15 December 2012 09:12 AM

    சிறு துளி பெரு வெள்ளம் போல் இச் சிறு போராட்டம் வெற்றி பெற்றது சரியே. எனினும் இந்த அரசைப் பொறுத்த வரை, முஸ்லிம்களின் நிலை "இஞ்சி கொடுத்து மிளகாய் வாங்கிய கதையாகவே உள்ளது. எனவே எதிர் காலத்தை சிந்தித்து செயல் பட்டால் சரியே.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X