2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

கிழக்கில் தமிழ்மொழி மூலமான வெளிநாட்டு வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் திறப்பு

Menaka Mookandi   / 2013 செப்டெம்பர் 16 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


இலங்கை வெளிநாட்டுப் வேலைவாய்ப்பு பணியகத்தின் கிழக்கு மாகாணத்திற்கான தமிழ் மொழி மூலமான வெளிநாட்டு வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் அட்டாளைச்சேனையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் தமிழ்மொழி மூலம் பயிற்சி பெறமுடியும்.
பயிற்சி நிலையத்தின் பயிப்பாளர் ஏ.எல்.மக்கீன் தலைமையில் நேற்று   முன்தினம் சனிக்கிழமை (14) இடம்பெற்ற இந்த நிகழ்வில் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

அத்துடன் கிழக்கு மாகாண வீதி அபிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் ஏ.கே.றோஹண, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பணிப்பாளர் எம்.ஏ.நஜீட் அகமட் ஆகியோர் கலந்து கொண்டனர்.


  Comments - 0

  • VALLARASU.COM Thursday, 19 September 2013 03:23 PM

    எங்களுக்கு செய்யவும் பிடிக்காது... செய்கிறவனையும் பிடிக்காது...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X