2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பாம்பு தீண்டிப் பெண் மரணம்

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 16 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கனகராசா சரவணன்

திருக்கோவில், தங்கவேலாயுதபுரம் பகுதியில் பாம்பு தீண்டி குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தங்கவேலாயுதபுரத்தைச் சேர்ந்த  சதாசிவம் நேசம்மா (வயது 47)  என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் இவர் தனது  அறையில் உறங்கிக்கொண்டிருந்தபோதே பாம்பு தீண்டியுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, இந்தப் பெண்ணை தீண்டிய பாம்பை பொதுமக்கள் அடித்துக் கொன்றுள்ளனர்



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X