2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

மீள்குடியேற்றக் கிராமத்திற்குள் யானைகள் புகுந்ததால் மக்கள் அச்சம்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 01 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


அம்பாறை, அக்கரைப்பற்று பனை அறுப்பான் மீள்குடியேற்றக் கிராமத்தில் இன்று செவ்வாய்க்கிழமை யானைகள் பிரவேசித்தமையினால் மக்கள் பெரும் அச்சத்திற்குள்ளானார்கள்.

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட இக்கிராமத்தில் யானைகள் தொடர்ந்து உட்பிரவேசித்து வருவதனால் தொடர்ந்தும் உயிர் அச்சுறுத்தலுடன்  வாழ்ந்து வருவதாக இப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு பிரவேசிக்கின்ற யானைகளினால் தமது குடிசைகள், வீட்டுத் தோட்டம் என்பனவும் துவம்சம் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை இக்கிராமத்திற்கான மின்சாரம், குடிநீர், பாடசாலை, போக்குவரத்து வசதி போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத நிலையில் மிகவும் கஷ்டங்களை தாம் எதிர் நோக்கி வருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இக்கிராமத்தின் பாதையூடாக சென்ற கிழக்கு மாகாண சபை அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை மற்றும் அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் ஆகியோர் குறித்த கிராமத்திலிருந்து யானைகளை வெளிNயுற்றுவதற்காக வன விலங்கு திணைக்கள அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு நடவடிக்கை மேற் கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .