2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பாலியல் சேஷ்டை புரிந்தவருக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 02 , பி.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

திருமணமான பெண்ணிடம் பாலியல் சேஷ்டை புரிந்தவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான் மற்றுமொருவரை சரீர பிணையில் விடுவித்துள்ளது.

அக்கரைப்பற்று நீதிமன்ற நீதவான் ரீ.சரவணராஜாவே மேற்கண்டவாறு தீர்ப்பளித்தார்.

அம்பாறை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் பாலியல் சேஷ்டை புரிந்த இருவரை நேற்று புதன் கிழமை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அதிலொருவரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் தீர்ப்பளித்தார்.

மற்றொரு நபரை 50,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப்பிணையில் விடுதலை செய்யுமாறும், எதிர்வரும் நவம்பர் மாதம் 18 ஆம் திகதி வரை வழக்கை ஒத்தி வைக்குமாறும் நீதவான் இதன் போது தீர்ப்பளித்தார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்ட நபர் பாலமுனை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும், இவர் பொலிஸாரின் தேடுதலில் இருந்து மறைந்து இருந்து நேற்று கைது செய்யபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பாலமுனை பிரதேசத்தைச் சேர்ந்த திருமணமான பெண்ணொருவரை இவர் பாலியல் சேஷ்டை புரிந்த குற்றத்தின் பேரிலேயே கைது செய்யப்பட்டு பொலிஸாரினால் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .