2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

யானைத்தந்தம் வைத்திருந்தவருக்கு கடூழியச் சிறைத்தண்டனை

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 21 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

யானைத்தந்தத்தையும் யானைமுடிகளையும் வைத்திருந்ததாகக் கூறப்படும்  20 வயது இளைஞர் ஒருவருக்கு 12 மாதகால கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறும் அம்பாறை நீதவான் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.பிரிங்கி நேற்று புதன்கிழமை  உத்தரவிட்டார்.

இது தொடர்பில் தமண பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து 2008ஆம் ஆண்டு  பன்னலகம மாந்தோட்ட பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில்  சட்டவிரோதமாக யானைத்தந்தம் மற்றும் யானைமுடிகளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் மேற்படி இளைஞர் கைதுசெய்யப்பட்டு  இவருக்கு எதிராக பொலிஸார் வழக்குக் தாக்குதல் செய்தனர்.

இந்த நிலையில்,  இவருக்கு எதிரான வழக்கு நடைபெற்றுவந்த நிலையில் நேற்று புதன்கிழமையும் இந்;த வழக்கை விசாணைக்கு எடுத்துக்கொண்ட நீதவான் மேற்கண்டவாறு தீர்ப்பளித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .