2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

புதிய வலயக் கல்விப் பணிப்பாளராக எம்.எஸ்.அப்துல் ஜலீல் நியமனம்

Kogilavani   / 2013 நவம்பர் 22 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா, ஏ.ஜே.எம்.ஹனீபா

சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தின் புதிய வலயக் கல்விப் பணிப்பாளராக எம்.எஸ்.அப்துல் ஜலீல் இன்று வெள்ளிக்கிழமை தமது கடமைகளை பொறுப்பேற்று கொண்டார்.

கடந்த 4 வருடங்களாக வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றய எம்.கே.எம்.மன்சூரின் இடத்திற்கு ஏற்பட்ட வெற்றிடத்திற்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் மன்சூரை மாகாணக் கல்வித் திணைக்களத்துடன் இணைத்து அவர் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க வேண்டுமென்ற கிழக்கு மாகாண அமைச்சரவை வாரியம் எடுத்த முடிவுக்கமையவே மன்சூரின் இடமாற்றம் இடம்பெற்றுள்ளது.

சம்மாந்துறை அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளராக பணியாற்றிய மருதமுனையைச் சேர்ந்த ஜலீல், கல்முனை, அக்கரைப்பற்று வலயங்களின் பிரதிக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .