2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

வீட்டில் கொள்ளையிட்டவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 24 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன், தேவ அச்சுதன்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் அன்சார்பள்ளி வீதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பான சந்தேக நபரை எதிர்வரும் 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இச்சந்தேக நபரை நேற்று சனிக்கிழமை அக்கரைப்பற்று நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய நிலையிலேயே அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் அன்சார்பள்ளி வீதியிலுள்ள வீடொன்றில்  நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பிலேயே இந்தச் சந்தேக நபர்; கைதுசெய்யப்பட்டார்.

இவ்வீட்டில் எவரும் இல்லாத வேளையில்  வீட்டின் கண்ணாடியை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து சந்தேக நபர் கொள்ளையிட்டார்.

இதன்போது மோதிரம், பதக்கம், தங்கச்சங்கிலி உள்ளிட்ட 3 பவுண் தங்கநகைகளையும் 15,000 ரூபா பணத்தையும் சந்தேக நபர் கொள்ளையிட்டுள்ளார்.

இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில்  விசாரணைகளை மேற்கொண்ட அக்கரைப்பற்றுப் பொலிஸார், சந்தேக நபரைக் கைதுசெய்திருந்தனர்.

 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .