2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

கல்முனை மேயருக்கு ஆடை அணிவிக்கும் விழா

Kanagaraj   / 2013 நவம்பர் 25 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.றம்ஸான், எம்.வை.அமீர், அப்துல் அஸீஸ், ஏ.எஸ்.எம் முஜாஹித்

கல்முனை மாநகர சபையின் புதிய மேயராக பதவியேற்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி செயலாளர் நாயகமும் சட்ட முதுமாணியுமான எம்.நிசாம் காரியப்பருக்கு முதல்வர் ஆடை அணிவிக்கும் விழாவில் கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயரும், மாநகர சபையின் பிரதி மேயருமான சிராஸ் மீராசாஹிப் பங்கேற்கவில்லை.

ஆடை அணிவிக்கும் விழாவும் பொது கூட்டமும் கல்முனை நகர மண்டபத்திற்கு அருகாமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை  இரவு பிரதான வீதியில்  இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் அப்துல் சத்தார் தலைமையில் இடம் பெற்ற இந்தவிழாவில்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸின் குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.தவம், ஏ.எல்.எம்.நஸீர், கட்சியின் மூத்த துணைத் தலைவர் ஏ.எல்.ஏ.மஜீத் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

அத்துடன் கல்முனை பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ.அசீஸ், கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, மாநகர சபை சபை உறுப்பினர்களான ஏ.ஏ.பஷீர், ஏ.எம்.றக்கீப், ஏ.எம்.பரக்கத்துல்லாஹ், உமர் அலி, எம்.எம்.முஸ்தபா உட்பட மற்றும் பல அரசியல் பிரமுகர்களும் பெருந்திரளான பொது மக்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் முதல்வர் நிசாம் காரியப்பருக்கு பிரதம அதிதியால் முதல்வர் ஆடை அணிவிக்கப்பட்டதுடன் , பல்வேறு பொது அமைப்புகளினாலும் பிரமுகர்களினாலும் பொன்னாடை போர்த்தியும் நினைவுச்சின்னங்கள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .