2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

புதிய மேயர் தலைமையில் முதலாவது சபை அமர்வு

Super User   / 2013 நவம்பர் 26 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எல்.அப்துல் அஸீஸ், எஸ்.எம்.எம்.றம்ஸான்


கல்முனையின் புதிய மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் தலைமையிலான முதலாவது சபை அமர்வு நேற்று திங்கட்கிழமை மாலை மாநகர சபை சபா மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த அமர்வில் பிரதி மேயர் சிராஸ் மீராஸாஹிப் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர் ஏ.எம்.நபார் ஆகியோர் தவிர்ந்த ஏனைய உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டு புதிய மேயருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ஏனைய உறுப்பினர்களின் கருத்துக்களை பெற்று தமது கடமைகளை மேற்கொள்ள போவதாக புதிய மேயர் தனது கன்னி உரையில் தெரிவித்தார்.

உறுப்பினர்கள் அனைவரும் திறந்த வெளிப்படை தன்மையுடன் பணியாற்றுவதன் ஊடாக சிறந்த கட்டமைப்பை உருவாக்குவோம் எனவும் அவர் குறிப்பிட்டார். இந்த அமர்வில் அடுத்த ஆண்டிற்கான நிதிக்குழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அது தொடர்பாக ஆராயப்பட்டது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .