2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

விதைநெல் சுத்திகரிப்பு நிலையம் இயங்கவில்லை என மக்கள் விசனம்

Kogilavani   / 2013 நவம்பர் 26 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


அம்பாறை மாவட்டம் தம்பட்டை பிரதேசத்தில் அமைக்கபட்ட விதைநெல் சுத்திகரிப்பு நிலையம் பல ஆண்டுகாலமாக பயன்பாடுகள் இன்றி மூடப்பட்டுக் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

சர்வதேச அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் பல மில்லியன் ரூபா நிதியில் நிர்மாணிக்கப்பட்ட இந்த நெல் சுத்திகரிப்புக் கட்டிடம் அம்பாறை மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் அசங்க அபேவர்தனவினால் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.

ஆயினும், இக்கட்டிடங்களிலுள்ள விதைநெல் சுத்திகரிக்கும் பகுதி மற்றம் நெல் களஞ்சியசாலை உள்ளிட்டவை இதுவரை இயங்காத நிலையிலேயே இருந்து வருவதுடன், இதற்காக வழங்கப்பட்ட இயந்திரத் தொகுதிகள், நெல்அறுவடை இயந்திரம் மற்றும் உபகரணங்கள் பழுதடையும் நிலையில் காணப்படுகின்றது.

எனவே சம்பந்தப்பட்டவர்கள் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி மக்கள் பயன்படும் வகையில் இதனை முறையாக இயங்கச் செயவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .