2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

அக்கரைப்பற்று கொள்ளை: சந்தேகநபருக்கு பிணை

Kanagaraj   / 2013 நவம்பர் 27 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் அன்சார்பள்ளி வீதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அப்துல் கரீம் இப்ராஸை 50 ஆயிரம் ரூபா சரீரப்பிணையில் செல்ல அக்கரைப்பற்று நீதிமன்ற நீதவான் ரீ.சரவணராஜா அனுமதித்துள்ளார்.

கடந்த 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இவர் 25 ஆம் திகதி திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் சந்தேகநபரை 2014 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ஒலுவில் அன்சார்பள்ளி வீதியைச் சேர்ந்த ஆதம்பாவா சகீலா உம்மா என்பவரது வீட்டில் யாரும் இல்லாதாபோது  கடந்த 21 வெள்ளிக்கிழமை பகல் வேளை வீட்டின் கண்ணாடியை உடைத்து உள்ளே நுழைந்து கொள்ளையிட்ட அப்பிரதேசத்தைச் சேர்ந்த 19வயது அப்துல் கரீம் இப்ராஸ் என்ற இளைஞனுக்கே அக்கரைப்பற்று நீதவான் இவ்வாறு பிணை வழங்கியுள்ளார்.

மோதிரம், பதக்கம், தங்கச்சங்கிலியுள்ளிட்ட 3 பவுண் நகையும், 15ஆயிரம் ரூபா பணமும் கொள்ளயிடப்பட்டுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட அக்கரைப்பற்றுப் பொலிஸார் அப்துல் கரீம் இப்ராஸ் என்ற இளைஞனை சந்தேகத்தின் பேரில் கைது செய்து கடந்த 23 ஆம் திகதி சனிக்கிழமை பகல் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியிருந்தனர். அதன்போது இவரை  25 ஆம ;திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அதன் படி மீண்டும் 25ஆம்திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்தியதற்கமைய நீதவான் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .