2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பஸ் சில்லில் சிக்கி இரண்டு குழந்தைகளின் தந்தை பலி

Kanagaraj   / 2013 நவம்பர் 30 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

பஸ் சில்லில் சிக்கி இரண்டு குழந்தைகளின் தந்தை பலியான சம்பவம் அம்பாறையில் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளதாக  பொலிசார்  தெரிவித்தனர்.

அம்பாறை- உகன பிரதேசத்தில் பயணிகள் வண்டியின் முன்னால் பாயந்த உகன பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய  இரண்டு பிள்ளைகளின் தந்தையான எச்.எம்.சந்திரசேன என்பவரே உயிரிழந்துள்ளார் .

அம்பாறைக்கும் கிமித்துலாவ பிரதேசத்துக்கும் இடையில் பயணிகள் சேவையில் ஈடுபட்டுவரும் இலங்கை போக்குவரத்துக்கு சொந்தமான பஸ்வண்டி சம்பவதினமான இன்று காலை 6.30 மணியளவில் உகன சற்றல் சந்தியடியில் பஸ் முன்னால் குறித்தநபர் பாய்துள்ளபோது பஸ்சின் சில்லில் அகப்பட்டு உயிரிழந்துள்ளார் .

இச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் அம்பாறை போதனா வைத்தியசாலையின் சவச்சாலையில் ஓப்படைக்கப்பட்டுள்ளதுடன் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை உகன பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .