Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஒக்டோபர் 01 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
இலங்கை மின்சார சபைக்கும் சாய்ந்தமருது பிரதேச மின் பாவனையாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று நேற்று வெள்ளிக்கிழமை இரவு சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
கல்முனை பிரதேச மின் பொறியியலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் 35,000 மின் பாவனையாளர்கள் இருக்கின்றார்கள். இவற்றுள் சாய்ந்தமருதில் மட்டும் 7,000 மின் பாவனையாளர்கள் இருக்கின்றார்கள்.
மின் பாவனையாளர்களுக்கும் மின்சார சபை ஊழியர்களுக்குமிடையே அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படும் சந்தர்ப்பங்கள் அதிகரித்துக் கொண்டே செல்லுகின்றன.
இதனை சுமூகமான முறையில் தீர்த்து வைக்கும் வகையில் புரிந்துணர்வொன்றினை இரு சாராருக்கும் ஏற்படுத்தும் வகையில் சாய்ந்தமருது பிரதேச மின் பாவனையாளர் சங்கமொன்றும் அமைக்கப்பட்டது.
இந்த கலந்துரையாடலின் போது கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் யூ.எல்.எம்.உவைஸ் மின் அத்தியட்சகர்களான எஸ்.பிரேமதாஸ், எம்.எம்.பதுர்நஹீம், எஸ்.எம்.அக்பர் ஆகியோர் இலங்கை மின்சார சபையின் சார்பில் கலந்து கொண்டனர்.
இது தொடர்பாக மின் பொறியியலாளர் உவைஸ் தமிழ்மிரருக்கு கருத்து தெரிவிக்கையில்,
கல்முனை மின் பொறியியலாளர் காரியாலயத்தில் 35,000 மின் பாவனையாளர்களுக்கும் 15 பேர் மாத்திரமே உத்தியோஸ்தர்களாகவும் ஊழியர்களாகவும் கடமையாற்றி வருகின்றனர்.
ஆளணி பற்றாக்குறை காரணமாக மின் பாவனையாளர்கள் விடுக்கும் வேண்டுகோளை உடனடியாக நிறைவேற்ற முடியாத நிலை ஏற்படுகின்றது.
அதனால் 7,000 மின் பாவனையாளர்களை கொண்ட சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான மின் அத்தியட்சகர் அலுவலகம் ஒன்று ஆரம்பிக்கப்பட
வேண்டும்.
இதனை இன்று அமைக்கப்பட்டுள்ள மின் பாவனையாளர் சங்கத்தின் ஊடாகவே முன்னெடுத்துச் செல்ல முடியும் என்றார் அவர்.
6 minute ago
47 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
47 minute ago
3 hours ago