Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 மே 23 , மு.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டாளைச்சேனைப் பகுதியில் 5 வயது சிறுமியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் 16 வயதுடைய இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை 6.30 மணியளவில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
குறித்த சிறுமி அட்டாளைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட இளைஞனை இன்றையதினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, 9 வயதுடைய சிறுமியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சம்பவம் தொடர்பில் 48 வயதான கடை முதலாளியொருவர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மற்றுமொரு சம்பவம் அட்டாளைச்சேனை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மேற்படி சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சம்பவம் தொடர்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கடைமுதலாளியை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
7 hours ago
16 Aug 2025
16 Aug 2025
ibnuaboo Friday, 27 May 2011 03:27 AM
காமுகர் நெஞ்சில் நீதி illai. அவர்களுக்கு siritho peritho pethamillai. நாய் kooda kuddi naayidam thappaa nadanthukkamaaddaathu.aanaa இந்த சில மனிதர்கள் naayilum kevalam.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
16 Aug 2025
16 Aug 2025