2025 ஒக்டோபர் 25, சனிக்கிழமை

இலத்திரனியல் வருகை பதிவும்; அஞ்சும் அரச ஊழியர்களும்

R.Tharaniya   / 2025 ஓகஸ்ட் 21 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 பெரும்பாலான தனியார் நிறுவனங்களில், கடமைக்கு வரும் நேரத்தையும், கடமை முடிந்து செல்லும்  நேரத்தையும் உறுதி செய்யக் கைவிரல் அடையாளம் வைப்பது நடைமுறையில் உள்ளது. எனினும், அரச நிறுவனங்களில் அவ்வாறான நடைமுறை இல்லை.

அதனை, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அமுல்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றது. 

தபால் துறை ஊழியர்கள் இதனை செய்ய மறுத்து தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். “வருகைப் பதிவை உறுதி செய்ய விரல் அடையாளம் கட்டாயம். அப்படி அதனை செய்ய விரும்பாதவர்கள் வேறு தொழிலை நாடலாம்” என அமைச்சர் நளிந்த  ஜயதிஸ்ஸ  பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்.

அரச நிறுவனங்கள் பலவற்றில், அரச உத்தியோகஸ்தர்களின் வருகை மற்றும் கடமையில் இருக்கும் நேரம், வெளியேறும் நேரம் போன்றவற்றில் ஏற்பட்டிருக்கும் குளறுபடியான நிலைமையை அவதானித்தே, அரசாங்கம் விரல் அடையாளத்தைப் பெற்றுக்கொள்வதைக் கட்டாயமாக்கி இருக்கலாம்.

தாங்கள், இதுவரை காலமும், நேரத்துக்கு வருகைதந்து, நேரத்துக்கே வெளியேறியிருக்கின்றோம். எவ்விதமான மோசடிகளிலும் ஈடுபடவில்லை என்றால், விரல் அடையாளத்தை வைப்பதற்கு ஏன்? அஞ்சவேண்டும். அந்த திட்டங்கத்துக்கு எதிர்ப்பை தெரிவிக்கவேண்டும். ஆக, ஏதோவொன்று இருக்கிறது.

பெருநகரங்களில் பலரும் இரண்டு, மூன்று வேளைகளை ஒரே நேரத்தில் செய்கின்றனர். சிலர் கடமையை முடித்துக்கொண்டு, பிற வேளைகளில் ஈடுபடுகின்றனர். இன்னும் சிலர், கடமை நேரத்திலேயே பிறவேளைகளில் ஈடுபடுகின்றனர்.

இதுதான் உண்மையாகும், ஆகையால், பொதுமக்கள் தங்களுக்கான முறையான சேவைகளை உரிய நேரத்தில் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருக்கின்றனர்.

அதுமட்டுமன்றி, நேரத்துக்குக் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும். அதற்கு விரல் அடையாளம் வைக்கும் முறையே சிறந்ததாகும். ஆனால், நேரத்துக்கு கடமைக்கு சமூகமளிக்காதவர்கள், நேரகாலத்துடன் வீடுகளுக்குச் சென்றுவிடுவோர், இதனால் சிக்கிக்கொள்வார்கள் என்பது வெளிச்சமாகும். அதேபோல, மேலதிக நேர வேலைசெய்ததாக, பொய்யான நேரங்களைக் குறிப்பிடுவோரும் சிக்கிக்கொள்வார்கள்.

பல நாடுகளிலும் அரச, தனியார் நிறுவனங்களில் பெரும்பாலானவை டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ளது. தரவுகளைத் திரட்டிக்கொள்வதற்கும், மனித வளத்தை குறைத்துக்கொள்வதற்கும் இவ்வாறான செயன்முறை 
இலகுவானதாக இருக்கும்.

ஆகையால் எவ்வாறான எதிர்ப்புகள் வந்தாலும்  முதுகெலும்புடன் நின்று, இந்த திட்டத்தை அரசாங்கம் அமுல்படுத்தவேண்டும். அதனூடாக அரச திணைக்களங்களில் இருந்து, சிறந்த சேவைகளைப் பொதுமக்களுக்குப் பெற்றுக்கொடுக்க முடியும்.

தாங்கள் நேர்மையாக நேரம் தவறானது சேவையாற்றுகின்றோம் என்பதில் உறுதியாக இருக்கும் எந்தவொரு அரச திணைக்களங்களைச் சேர்ந்தவர்களும் இந்த  “வருகைப்பதிவை உறுதி செய்ய விரல் அடையாளம் கட்டாயம்” என்பதற்கு எதிர்ப்பை தெரிவிக்கமாட்டார்கள். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X