Janu / 2026 ஜனவரி 26 , பி.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் கலாசாரத்துக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில், மத வழிபாட்டிடங்களில் தொல்பொருள் ஆராய்ச்சி எனும்பெயரில் புத்தர் சிலைகளை கொண்டுவந்து வைத்துவிட்டு, ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றமையும், பின்நாட்களில், அவ்விடங்களில் பௌத்த விஹாரைகள் கட்டியெழுப்பப்பட்டமையும் கண்கூடு,
தமிழர்களின் மத கலாசாரம் மட்டுமன்றி, முஸ்லிம்களின் பூர்வீக இடங்களையும் கைப்பற்றியுள்ளமை கிழக்கில் அடத்தாக இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. சில வெளிப்படையாகவும் பல நடவடிக்கைகள் மறைமுகமாகவும் முன்னெடுக்கப்படுகின்றன. எப்படியோ, சிறுபான்மையின சன பரம்பலை குறைக்கும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகின்றன.
அவற்றுக்கு வியாக்கியானமாக, தென்னிலங்கையில் ஆலயங்கள் இருக்கும் போது, வடக்கில் புத்தர் சிலைகளை வைப்பதில் என்ன தவறு என்றும் இனவாதத்தை கக்குவோர் கேள்விகளை எழுப்புகின்றனர். பெரும்பான்மை இனத்தவர்கள் ஒருவர் கூட இல்லாத இடங்களில் புத்தர் சிலைகளை வைப்பது ஏன்? என்பதே பிரதான கேள்வியாக இருக்கிறது.
இதற்கிடையே வெளிஓயா, மணலாறு திட்டங்களின் கீழ் வடக்கில் பெரும்பான்மை இனத்தவர்கள் குடியமர்த்தப்பட்டனர். இந்நிலையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் எல்லைக் கிராமங்களை இலக்கு வைத்துள்ள கிவுல் ஓயா திட்டத்துக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் முயற்சிகளை தேசிய மக்கள் சக்தியின் தலைவர் ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்துவருகின்றது. இந்த கிவுல் ஓயா திட்டமானது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் 2011 இல் ஆரம்பிக்கப்பட்டு, இடைநிறுத்தப்பட்ட திட்டமாகும்.
நீர்ப்பாசனம் என்ற போர்வையில் முன்னெடுக்கப்படும் இத்தகைய பாரிய திட்டங்கள், காலப்போக்கில் தமிழ் மக்களின் பாரம்பரிய நில உரிமைகளைப் பறித்து, எல்லை நிர்ணயங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது கடந்த கால கசப்பான அனுபவங்களின் வெளிப்பாடாகவுள்ளது.
வவுனியா மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் உற்பத்தியாகி, முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய்க்குச் செல்லும் 'மா ஓயா'வின் பிரதான கிளை நதியே கிவுல் ஓயாயாகும். இந்தக் கிவுல் ஓயாவை மையப்படுத்தி அணையைக்கட்டுவதன் மூலமாக, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு விவசாயத்துக்கான நீர் மற்றும் குடிநீர் வசதியை ஏற்படுத்த முடியும் என்று மகாவலி அதிகார சபை முன்மொழிந்துள்ளது.
கிவுல் ஓயா நீர்ப்பாசனத் திட்ட முன்மொழிவின் அடிப்படையில், வடக்கில் வலிந்து குடியேற்றப்பட்ட சிங்கள பௌத்தர்களை மட்டுமே இத்திட்டம் மையமாகக் கொண்டது என்றும் குற்றச்சாட்டுகின்றனர்.
26.01.2026
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago