2025 ஜூலை 09, புதன்கிழமை

குசலை ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம்...

R.Tharaniya   / 2025 ஜூலை 08 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் மாவட்டம் சிலாபம் குசலை அருள்மிகு ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் புனராவர்த்தன பஞ்சகுண்ட பக்ஷ பிரதிஷ்ட மஹா கும்பாபிஷேக பெருவிழா திங்கட்கிழமை (07) அன்று காலை 9 மணி தொடக்கம் 10.45 மணி வரை உள்ள சிங்கலக்கின சுப முகூர்த்த சுப வேளையில் ஶ்ரீ முத்துமாரியம்மன் அம்மனுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் மஹா கும்பாபிஷேகம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

பிரதான கும்பம் சுமந்த குருக்கள் நாதஸ்வர மேள தாளம் முழங்க உள் வீதி, வெளி வீதி வலம் வந்து கோபுர கலசத்துக்கு கும்ப நீர் அபிஷேகம் இடம்பெற்றது.

இதன் போது, கும்பாபிஷேக நிகழ்வுகளை சர்வசாதகம் பிரம்மஶ்ரீ எஸ்.பத்மநாதக் குருக்கள், பிரதிஸ்டா பிரதம குரு “கிரியா ஜோதி “சிவஶ்ரீ இராம முரளீதரக் குருக்கள்,சர்வசாதகம் “சாதக திலகம் “சிவஶ்ரீ பத்ம ரங்கநாதக் குருக்கள் அத்துடன் ஆலய பிரதம குரு பிரம்மஶ்ரீ பா.வாசுதேவ சர்மா ஆகியோர் கலந்து கொண்டு நடத்தி வைத்தனர்.

இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு அம்பாளின் அருளைப் பெற்றுக் கொண்டனர்.

எம்.யூ.எம்.சனூன்

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .