2021 ஜூன் 24, வியாழக்கிழமை

பிதிர்க் கடன் நிறைவேற்றல்

Editorial   / 2020 ஜூலை 20 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட

ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு, மன்னார் திருக்கேதீஸ்வர கோவிலில், இன்றைய தினம் பிதிர்க் கடன் நிறைவேற்றும் நிகழ்வு நடைபெற்றது.

பிராமணர்கள் இடத்து இறந்த பிதிர்களின் ஆன்ம ஈடேற்றம் வேண்டி, மக்கள் பிதிர்க் கடன்களை நிறை வேற்றியுள்ளனர்.  அத்தோடு, வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கேதீஸ்வர கோவிலில் நெய் விளக்குகளை ஏற்றி பெருமானுக்கு மோட்ச விளக்குகளை ஏற்றி பக்தர்கள் நிறைவேற்றினர்.

அத்துடன், இறந்தவர்களின் ஆன்மா கிடைத்ததற்காக அடியவர்கள் கடமைகளை நிறைவேற்றியதைக் காணக்கூடியதாக இருந்தது. சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மக்கள் கலந்துகொண்டிருந்தனர். 

மேலும், ஆன்ம ஈடேற்றம் வேண்டி திருக்கேதீஸ்வர பாலாவி தீர்த்தத்தில் நீராடி பிதிர்க் கடன்களை மக்கள் நிறைவேற்றினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .