Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 ஓகஸ்ட் 16 , பி.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
நெல்லை மாவட்டம் சுத்தமல்லி பகுதியை பூர்வீகமாக கொண்ட மாசிலாமணி-ஆனந்தி தம்பதியினர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார்கள்.
அங்கு மாசிலாமணி, தனியார் உணவகத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு காயத்ரி, கீர்த்திகா, நாராயணி என 3 மகள்கள் உள்ளனர்.
மூன்று பேரும் பிரான்சில் படித்து, அங்கேயே பணியாற்றி வருகின்றனர். மூவரும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த வாலிபர்களை காதலித்து வந்துள்ளனர். காதலுக்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் மாசிலாமணி குடும்பத்தினர், தமிழ் கலாசார முறைப்படி திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
இதையடுத்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தனது உறவினர்களுடன் வந்த மாசிலாமணி-ஆனந்தி தம்பதியினர். தங்களின் 3 மகள்களுக்கும் ஒரே நேரத்தில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜார்ஜ், ராம்குமார், மஜ்ஜூ ஆகிய மூவருக்கும் தமிழ் கலாசார முறைப்படி மாலை மாற்றி திருமணம் செய்து வைத்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .