Freelancer / 2025 ஜூன் 01 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் பெய்து வரும் இடைவிடாத அடைமழையால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி தத்தளிக்கின்றன.
குறிப்பாக சிக்கிம் மாநிலத்தில பெய்யும் இடைவிடாத மழையால், நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் முக்கிய சாலை தடைப்பட்டதால் 500க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சிக்கியுள்ளனர்.
இதற்கிடையில் மங்கன் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (30) இரவு 11 பேருடன் சென்ற சுற்றுலா வாகனம் டீஸ்ட்லா ஆற்றில் மூழ்கியது. இதில் ஒருவர் உயிரிழந்தார். இரண்டு பேர் காயம் அடைந்தனர். 8 சுற்றுலாப் பயணிகள் மாயமானார்கள்.
அவர்களை தேடும் பணி அடைமழை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இரண்டு நாட்களுக்கு வடக்கு சிக்கிம் பகுதிகளுக்கு சுற்றலாப் பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
40 minute ago
53 minute ago
55 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
53 minute ago
55 minute ago
2 hours ago