Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.K.M. Ramzy / 2021 செப்டெம்பர் 02 , மு.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
மும்பை
மும்பையில், காதலனுடன் சுற்றியதை கண்டித்த அண்ணன் மீது, 2019 ஆம் ஆண்டு தங்கை பாலியல் புகார் அளித்தார். இதில் கைதாகி, இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்த அண்ணன் மீதான புகார், பொய் என தெரிய வந்ததால் தற்போது விடுவிக்கப்பட்டு உள்ளார்.
மும்பையை சேர்ந்த 16 வயது தங்கை, தன் 24 வயது அண்ணன், தன்னை இரு முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக 2019ஆம் ஆண்டு பொலிஸில் புகார் அளித்தார்.
பலாத்காரம் குறித்து தன் பெற்றோரிடம் கூறியும், அவர்கள் அண்ணன் மீது புகார் அளிக்காமல் கண்டிக்க மட்டுமே செய்ததால், தானே, பொலிஸிடம் வந்ததாக தங்கை கூறினார்.
வழக்குப்பதிவு செய்த பொலிஸார், அண்ணனைக் கைது செய்து நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர். 'போக்சோ' வழக்கு என்பதால், அவரது பிணை மனு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், சமீபத்தில் நீதிமன்றத்தில் ஆஜரான தங்கை, தன் அண்ணன் மீது பொய் புகார் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்தார்.
அதில், தான் காதலனுடன் வெளியே சுற்றுவதை கண்டித்த அண்ணன், காதலர் என்னை ஏமாற்றி விடுவார் என கூறி தாக்கியதால், அவருக்கு எதிராக பொய் புகார் அளித்ததாக கூறினார்.குற்றம் சாட்டப்பட்டவருக்கு புகார்தாரர் தங்கை என்பதால், அண்ணனை காப்பாற்றுவற்காக நடந்தவற்றை மாற்றிக் கூறுவதாக, அரசாங்க தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
இந்த வழக்கில், பாலியல் பலாத்காரத்துக்கு, தங்கை தவிர வேறு சாட்சிகள் மற்றும் ஆதாரங்கள் ஏதுமில்லை. எனவே, வழக்கை தொடர்வது தேவையற்றது என கூறிய நீதிமன்றம், இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்த அண்ணனை விடுவித்தது.
2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago