A.K.M. Ramzy / 2021 மே 25 , பி.ப. 01:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடில்லி:
'வங்கக்கடல் பகுதியில் உருவான 'யாஸ்' புயல், இன்று அதி தீவிர புயலாக மாறவுள்ளதென இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் கடந்த 22ஆம் திகதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவானது. இது, 23 ஆம் திகதி இரவு ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக அடுத்தடுத்து வலுவடைந்து, மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்தது.
இது நேற்று 24ஆம் திகதி மேலும் வலுவடைந்து, புயலாக மாறியது. இந்தப் புயலுக்கு 'யாஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் புயல் நேற்று நண்பகலில் அந்தமான் தீவுகள் பகுதியில் போர்ட் பிளேயருக்கு வடக்கு - வடமேற்கே 630 கி.மீ., தொலைவிலும், ஒடிஸா மாநிலம் பாரதீப்க்கு தெற்கு - தென் கிழக்கே 520 கி.மீ., தொலைவிலும், பாலசோருக்கு தெற்கு - தென் கிழக்கே 620 கி.மீ., தொலைவிலும் நிலைகொண்டிருந்தது.
இது வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, தீவிர புயலாக மாறும். பின், அதிதீவிர புயலாக இன்று மாலை அல்லது இரவு மாறவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
6 minute ago
21 minute ago
35 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
21 minute ago
35 minute ago
45 minute ago