2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

அந்தரங்கத்தை வெளியிட்ட வைத்தியரை கொன்ற காதலி

Editorial   / 2022 செப்டெம்பர் 21 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 அந்தரங்க வீடியோவை வெளியிட்டதாகக் கூறி, தனது காதலனான வைத்தியரை தனது 3 நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த காதலியை பெங்களூர் பொலிஸார் கைது செய்தனர்.

சென்னையைச் சேர்ந்த டாக்டர் விகாஷ், உக்ரேனில் மருத்துவப் படிப்பை  முடித்துவிட்டு சென்னையில் மருத்துவராகப் பணியாற்றி வந்தார். மேலும், இவர்  தனது உயர் படிப்பிற்காக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பெங்களூரு வந்தார்.

இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைதளங்கள் மூலம்  அறிமுகமானவர் பிரதீபா, இவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர். இவர், எச்எஸ்ஆர் லே  அவுட்டில் உள்ள  நிறுவனத்தில் கட்டிட கலைஞராகப் பணியாற்றி வருகிறார்.

நண்பர்களாக  இருந்த இருவரும் பின்னர் காதலிக்க தொடங்கினர். இவர்களின் காதலுக்கு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்த நிலையில், இருவருக்கும் எதிர்வரும் நவம்பர்  மாதம் திருமணம் நடத்தி வைக்க ஏற்பாடு செய்தனர்.

இந்நிலையில், பிரதீபா மற்றும் அவரது தாயாரின் அந்தரங்க வீடியோக்களை விகாஷ் போலியான இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் பதிவிட்டு அதை தனது நெருங்கிய நண்பருக்கு அனுப்பி வைத்துள்ளார். விகாஷின் மடிக்கணினியை பயன்படுத்திய போது அவரது செயலை கண்டு அதிர்ச்சி அடைந்த பிரதீபா அவரிடம் சண்டை போட்டார். அதன்பின்னரே, தனது நண்பர்களுடன் இணைந்து வைத்தியரை படுகொலை செய்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X