2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

அப்பளம் சண்டையில் மூவர் படுகாயம்

Editorial   / 2022 ஓகஸ்ட் 30 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருமண வீடொன்றின் விருந்துபசாரத்தின் போது, அப்பளத்தால் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில், மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் கேரளாவில் இடம்பெற்றுள்ளது.

 அங்கு ஹரிப்பாடு முட்டம் பகுதியிலுள்ள  திருமண மண்டபமொன்றில்,  திருமணம் இடம்பெற்றது.

திருமணம் முடிந்ததும் அந்த மண்டபத்திலேயே விருந்து தொடங்கியது. அப்போது பந்தி பரிமாறியவர்கள் மாப்பிள்ளையின் தோழர்களுக்கு அப்பளம் வைக்கவில்லை. இதனை ஒருவர் கேட்டபோது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

மாப்பிள்ளையின் நண்பர்களுக்கே அப்பளம் இல்லையா? என்று மாப்பிள்ளையின் உறவினர்களும் அங்கே திரள, விருந்து நடந்த மண்டபம் களேபரமானது. அப்போது மாப்பிள்ளை நண்பர் ஒருவர் மேஜை, நாற்காலிகளை அடித்து உடைக்க அதனை பெண் வீட்டாரும், மண்டப ஊழியர்களும் தட்டி கேட்டனர்.

இதில் பிரச்சனை பெரிதாக அங்கு கோஷ்டி மோதல் ஏற்பட்டது. மாறிமாறி இரு தரப்பினரும் மோதிக“ கொள்ள மண்டப ஊழியர்கள் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதனை கண்டு மண்டபத்தில் இருந்த உறவினர்கள் சிதறியடித்து பதறியோடினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X