Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 நவம்பர் 15 , பி.ப. 05:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
2023ஆம் ஆண்டு கோடை காலத்துக்குள் அமெரிக்க விசாக்களை பெறும் எண்ணிக்கையில், சீனாவை இந்தியா முந்திவிடும் என்று எதிர்பார்ப்பதாகவும் விசா பெறுவதில் மெக்சிகோவுக்கு அடுத்தபடியாக 2ஆவது இடத்தைப் பிடிக்கும் என்றும் புதுமெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நவம்பர் நடுப்பகுதியில் பல இடங்களை திறக்கவுள்ளதாகவும் எச் மற்றும் எல் பணியாளர் விசா விண்ணப்பதாரர்களுக்கு 100,000 இடங்களை அமெரிக்கா திறந்துள்ளமையால் இது காத்திருப்பு நேரத்தை குறைக்கும் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
மாணவர்கள், உயர்தொழில்நுட்பப் பணியாளர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வணிகம் ஆகியவற்றில்
பெரிய பிரிவுகள் உள்ளதாகத் தெரிவித்த அதிகாரி, இப்போது வொஷிங்டனுக்கு இந்தியா முதலிடம் வகிக்கிறது என்றார்.
ஒக்டோபரில், இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம், எச் மற்றும் எல் பணி விசா வகைகளுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட நியமனங்களை வெளியிட்டது.
"வேலைவாய்ப்பு அடிப்படையிலான விசாக்களுக்கான அதிக தேவைக்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியாவுக்கான அமெரிக்க மிஷன் சமீபத்தில் எச் மற்றும் எல் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு 100,000 நியமனங்களை வெளியிட்டது" என்று இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் டுவீட் செய்தது.
கடந்த மாதம் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் அண்டனி பிளிங்கனிடம் விசா தாமதப் பிரச்சினையை எழுப்பியதை அடுத்து, அமெரிக்க தூதரகம் அளித்த முக்கிய உத்தரவாதங்களில் இதுவும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago