A.K.M. Ramzy / 2021 ஜூன் 21 , பி.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

இடாநகர்:
அருணாசல பிரதேசத்தின் இடாநகரில் இருந்து தென்மேற்கே இன்று காலை 6.09 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 3.0 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.
இதனால் ஏற்பட்ட பொருள் இழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை. கடந்த சில நாட்களாக வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ச்சியாக நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டு வருகின்றன. நேற்று அதிகாலையில் மணிப்பூர், அருணாசல பிரதேசம் மாநிலங்களில் நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டன.
இதேபோன்று நேற்று முன்தினமும் வடகிழக்கு மாநிலங்களில் நிலநடுக்கங்கள் உணரப்பட்டன.
நாட்டின் தலைநகர் டெல்லியில் பஞ்சாபி பாக் பகுதியில் நேற்று மதியம் 12.02 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு ரிக்டர் அளவில் 2.1 ஆக பதிவாகி இருந்தது. இதனால் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அச்சத்தில் உறைந்து உள்ளனர்.
13 minute ago
17 minute ago
31 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
17 minute ago
31 minute ago
40 minute ago