2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

அறுவை சிகிச்சை செய்ய 3 கி.மீ ஓடிய டாக்டர்

Editorial   / 2022 செப்டெம்பர் 12 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்ட மருத்துவர், காரில் இருந்து கீழே இறங்கி ஓடி மருத்துவமனைக்குச் சென்று அறுவை சிகிச்சை செய்த நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த குடல் அறுவை சிகிக்சை மருத்துவர் . இவர் சர்ஜாபூரில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில், கடந்த ஓகஸ்ட் 30ஆம் திகதி ஒரு நோயாளிக்கு அவசர அறுவை சிகிச்சை செய்ய திகதி கொடுத்துள்ளார்.

இந்நிலையில்,கடந்த இரு வாரங்களாக பெங்களூருவில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக நீர் தேங்கி அங்கு டிராபிக் கடுமையாக இருந்து. சம்பவ தினமான ஓகஸ்ட் 30ஆம் திகதி அன்றும் காலை மருத்துவர் வீட்டில் இருந்து காரில் கிளம்பி மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.

ஆனால், போக்குவரத்து காரணமாக அவர்  மருத்துவமனைக்குச் செல்ல தாமதம் ஆகியுள்ளது. அறுவை சிகிச்சைக்கான நேரம் நெருங்கிய நிலையில், போக்குவரத்து நெரிசல் சரியாவதாக தெரியவில்லை. எனவே, சற்றும் யோசிக்காமல் காரை சாரதியிடம் கொடுத்துவிட்டு  இறங்கி மருத்துவமனையை நோக்கி ஓட ஆரம்பித்துள்ளார். சுமார் 3 கிலோ மீற்றர் தூரம் மருத்துவமனைக்கு ஓடிச் சென்று மருத்துவமனையை அடைந்துள்ளார். பின்னர் குறித்து நேரத்தில் அறுவை சிகிச்சையும் மேற்கொண்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X