A.K.M. Ramzy / 2021 ஏப்ரல் 20 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை:
குடலிறக்க அறுவை சிகிச்சை முடிந்து முதல்வர் பழனிசாமி இன்று (20) வீட்டுக்குச் சென்றார்.தமிழக முதல்வர் பழனிசாமி, குடல் இறக்க அறுவை சிகிச்சைக்காக நேற்று (19) அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பட்டது. சிகிச்சைக்கு முன்னதாக முதல்வருக்கு மேற்கொள்ளப் பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
சிகிச்சைக்கு பின் முதல்வர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், இன்று முதல்வர் பழனிசாமி வீட்டுக்குச் சென்றார். வீட்டில் அவர் 3 நாட்கள் முழு ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
15 minute ago
19 minute ago
33 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
19 minute ago
33 minute ago
42 minute ago