Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 செப்டெம்பர் 29 , மு.ப. 09:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
அலுவலக நேரங்களில் கைத் தொலைபேசியைப் பயன்படுத்த மின்சாரப் பணியாளா்களுக்கு ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடா்பாக ஆந்திர பிரதேச மத்திய மின் விநியோக நிறுவனத்தின் தலைவா் ‘பத்மா ரெட்டி‘ வெளியிட்ட உத்தரவில், ‘தகவல் தொழில்நுட்ப சாதனங்களைப் பணி நேரத்தில் பயன்படுத்துவது தொல்லையாகவுள்ளது.
ஊழியர்கள் தொலைபேசிகளை மணிக்கணக்கில் பயன்படுத்தி பணிநேரத்தை வீணாக்கி வருவதால் தினசரிப் பணிகள் பாதிப்படைகின்றன.
இதனால், உயரதிகாரிகளைத் தவிர கணினி பயன்பாட்டாளா்கள், ஆவண உதவியாளா்கள், தட்டச்சாளா்கள், தற்காலிக பணியாளா்கள் என அனைவரும் ஒக்டோபா் 1-ஆம் திகதி முதல் பணிநேரத்தில் கைத் தொலைபேசியைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படுகிறது.
மதிய உணவு நேரம், இடைவேளையில் மாத்திரம் கைப்பேசிகளைப் பயன்படுத்தலாம்.
இதனைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
44 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
2 hours ago
3 hours ago