Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.K.M. Ramzy / 2021 ஓகஸ்ட் 01 , மு.ப. 09:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழகம்
தமிழக சட்டசபை நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத் திறப்பு விழாகளை,அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ( அ.தி.மு.க) புறக்கணிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டசபை நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவப்படத் திறப்பு விழா, நாளை மாலை 5:00 மணிக்கு நடக்க உள்ளது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கருணாநிதி படத்தை திறந்து வைக்க உள்ளார்.
இந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு,தி.மு.க., கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், கட்சி தலைவர்கள் என, 350க்கும் மேற்பட்டவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
கருணாநிதியின் குடும்பத்தினரில் எம்.எல்.ஏ., - எம்.பி.,க்களாக இருப்பவர்களுக்கு மட்டும் அழைப்பிதழ் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. மற்ற உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் வழங்க வேண்டாம் என, முதலமைச்சர் ஸ்டாலின் தரப்பில் உத்தரவிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் தங்களுடைய குடும்ப உறுப்பினர்களுடன் விழாவில் பங்கேற்க வாய்ப்பில்லை. முன்னாள் சபாநாயகர்களுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
வன்னியர் சமுதாயத்திற்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை அமுல்படுத்த, முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதால், பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்க உள்ளனர்.கடைப்பிடிக்க முடிவுஅதேபோல ஜனாதிபதி பங்கேற்பதால், தமிழக பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் புறக்கணிக்க வாய்ப்பு இல்லை. ஆனால், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் 65 பேர், கருணாநிதி படத்திறப்பு விழாவை புறக்கணிக்க வாய்ப்பு உள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில், ஜெயலலிதா படத்திறப்பு விழாவில் தி.மு.க., பங்கேற்கவில்லை.அதன் கூட்டணி கட்சி யான காங்கிரசும் புறக்கணித்தது. தி.மு.க., கடைப்பிடித்த புறக்கணிப்பு அணுகுமுறையை, அ.தி.மு.க.,வும் தற்போது கடைப்பிடிக்க முடிவு செய்துள்ள தகவல்வெளியாகி உள்ளது.
5 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
9 hours ago