A.K.M. Ramzy / 2021 ஜூன் 07 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

சென்னை
கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, சென்னை, ராயப்பேட்டையில் உள்ள சீனிவாச பெருமாள் கோவில் வாசலில், கோழி மற்றும் ஆட்டுபிரியாணியை,திராவிட முன்னேற்றக் கழகத்தினர் வழங்கியதற்கு, ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
சமீபத்தில், கருணாநிதியின், 98வது பிறந்த நாளை, தி.மு.க.,வினர் கொண்டாடினர்.கொரோனா பரவல் காரணமாக, கட்சியினர் தங்களது வீடுகளில் பிறந்த நாளை கொண்டாடும்படி, முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால், சென்னை, ஆயிரம் விளக்கு பகுதி, ராயப்பேட்டை, 118வது கிழக்கு வார்டில் அமைந்துள்ள, சீனிவாச பெருமாள் சன்னதி தெருவில் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலின் வாசலில், கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, சமீபத்தில், அப்பகுதி மக்களுக்கு, கோழி மற்றும்ஆட்டுபிரியாணி பொட்டலங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்காக, கோவில் வாசலை அடைத்து, விளம்பர அட்டைகளையும் வைத்துள்ளனர்.
தி.மு.க., - எம்.பி., தயாநிதி, ஆயிரம்விளக்கு தொகுதி எம்.எல்.ஏ., எழிலன், பகுதிச் செயலர் அன்புதுரை, பொதுக்குழு உறுப்பினர் வி.எஸ்.ராஜ், வட்ட செயலர் யுவராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். பிரியாணியை வாங்க வந்தவர்கள், முகக் கவசம் அணியவில்லை, சமூக இடைவெளியும் கடைப்பிடிக்காமல், மிக நெருக்கமாக நின்று, பிரியாணி வாங்கி சென்றனர். பெருமாள் கோவில் முன் அசைவ உணவு வழங்கியது,
அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு அதிர்ச்சியையும், பக்தர்களுக்கு மன வேதனையையும் அளித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக, ஹிந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago