2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

ஆணவக்கொலை செய்யப்பட்ட இஸ்லாமியப் பெண்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 29 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

18 வயது இஸ்லாமிய பெண் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், ஆணவக் கொலை நடைபெற்றுள்ளது என்பதை உத்தரபிரதேச காவல்துறையினர் கண்பிடித்துள்ளனர்.

உத்தரபிரதேசத்தில் உள்ள பாலி மாவட்டத்தில், 18 வயது இஸ்லாமிய பெண்ணின் உடலை தோண்டி எடுத்து விசாரித்து வருகின்றனர். மேலும் இவருடன் 19 வயது தலித் இளைஞரின் உடலையும் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். இவர்கள் இருவரும் ஒரே கிராமத்தில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் அப்பெண்ணின் சகோதரர்கள் இருவர் மற்றும் உறவினர் ஒருவரையும் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது எஸ்சிஃஎஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த இன்ஸ்பெக்டர் ராம் கிருஷ்ணா பரத்வாஜ் கூறுகையில், ' உடல் கூறாய்வு முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். அதன் முடிவுகள் வந்ததும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம்' என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில்,  இஸ்லாமிய பெண்ணும் அந்த இளைஞரும் காதலித்து வந்ததாகவும். அப்பெண்ணின் குடும்பத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் என்று கூறுகின்றனர்.

மேலும் தலித் இளைஞரின் கழுத்தில் காயங்களை இருப்பதை காவல்துறையினர் தரப்பு கூறுகிறது.

இந்நிலையில் இது தொடர்பாக தலித் இளைஞரின் சகோதரி கூறுகையில் ' எனது சகோதரர் டிராக்டர் ஓட்டி வந்தார். அவர்கள் வீட்டில்தான் அவர் வேலை செய்தார். இந்நிலையில் வெள்ளிகிழமை இரவு அந்த பெண்ணின் அண்ணனிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. எந்த விவரமும் எங்களிடம் சொல்லாமல் எனது சகோதரர் கிளம்பிச் சென்றுவிட்டார்.

இதைத்தொடர்ந்து அவர் காணவில்லை. இதுதொடர்பாக அப்பெண்ணின் சகோதரரிடம் கேட்டபோது எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று கூறிவிட்டார். இதைத்தொடர்ந்து அப்பெண்ணின் உடலை அவரது குடும்பத்தினர் அடக்கம் செய்வதாக கிராமத்தினர் கூறினர். இதைத்தொடர்ந்து எனது சகோதரை நாங்கள் தேடினோம். அப்பெண்ணின் அண்ணன் வீட்டுக்கு அருகில் அவரது உடல் கிடந்தது. இதைத்தொடர்ந்து காவல்துறையினரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தோம்' என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் இந்துக்கள் அதிகமாக இருக்கும் அந்த கிராமத்தில் தற்போது காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X